பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6,475 கோடிக்கு வங்கிகள் கடன் இலக்கு

Added : நவ 25, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, மூன்றாம் காலாண்டுக்கான வங்கியாளர்கள் கூட்டத்தில், தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி பேசியதாவது: நபார்டு வங்கி, தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம், 6,475 கோடி ரூபாய், கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி பயிர் உற்பத்தி, மேலாண்மை மற்றும்

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, மூன்றாம் காலாண்டுக்கான வங்கியாளர்கள் கூட்டத்தில், தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி பேசியதாவது: நபார்டு வங்கி, தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம், 6,475 கோடி ரூபாய், கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி பயிர் உற்பத்தி, மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்த, வேளாண்மையில் இயந்திர மயமாக்கல், சொட்டுநீர் பாசன முறை மற்றும் தெளிப்புநீர் பாசன முறை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கான நீண்டகால கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட, பல்வேறு பணிகளுக்கு கடன் வழங்க நாபர்டு வங்கி, 6,475 கோடி ரூபாய் கடன் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இதை மாவட்ட மக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X