உயிருக்கு போராடுபவர்களை மீட்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு

Added : நவ 25, 2021
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: சாலை விபத்தின்போது, உயிருக்கு போராடுவோரை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்போருக்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம், கலெக்டர் தலைமையிலான குழு பரிந்துரை அறிக்கை பெற்று, சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின், மீட்டவர்களின் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தப்படும்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: சாலை விபத்தின்போது, உயிருக்கு போராடுவோரை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்போருக்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம், கலெக்டர் தலைமையிலான குழு பரிந்துரை அறிக்கை பெற்று, சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின், மீட்டவர்களின் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தப்படும். இத்திட்டம் வரும், 2026 மார்ச், 31 வரை செயல்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும், 10 பேருக்கு தலா, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். எனவே, சாலை விபத்தின்போது, உயிருக்கு போராடுவோரை மீட்பவர்களுக்கு பரிசு பெற்றுத்தர, மாவட்ட குழு பரிந்துரை செய்யும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X