சாலை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், குடிமேனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பாறைக்கொட்டாய் கிராமத்தில், 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இம்மக்கள் மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்றால், சாலை வசதி இல்லாமல், சாலையில் தேங்கி நிற்கும் மூன்று அடி தண்ணீரில் இறங்கி நடந்தும், இருசக்கர வாகனங்களை

போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், குடிமேனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பாறைக்கொட்டாய் கிராமத்தில், 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இம்மக்கள் மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்றால், சாலை வசதி இல்லாமல், சாலையில் தேங்கி நிற்கும் மூன்று அடி தண்ணீரில் இறங்கி நடந்தும், இருசக்கர வாகனங்களை தள்ளிச்செல்லவும் வேண்டும். இக்கிராமத்திலிருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினமும் முழங்கால் அளவு நீரில் சைக்கிளை தள்ளியும், நடந்தும், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இக்கிராமத்திற்கு குடி தண்ணீர் வசதி இல்லாததால், அருகிலுள்ள விவசாய கிணறுகளை தேடி, குடி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இது சம்மந்தமாக பஞ்., நிர்வாகம், தாசில்தார், கலெக்டர் அலுவலகம் என பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X