பொது செய்தி

தமிழ்நாடு

21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: விழுப்புரம், மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே, ரகசிய கதவலின் கிடைத்த வாகன பதிவு எண்ணை வைத்து, எதிரே வந்த டாரஸ்

ஊத்தங்கரை: விழுப்புரம், மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே, ரகசிய கதவலின் கிடைத்த வாகன பதிவு எண்ணை வைத்து, எதிரே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரியில், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 600 கேன்களில், 21 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த லாரி டிரைவர் பாலேந்திரசிங், 33, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து பறிமுதல் ?செய்த, 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்.பி., சுப்புலட்சுமி பார்வையிட்டார். பின், அவை, ஓசூர் கலால் பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X