பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறளை தலைகீழாக எழுதி அசத்திய மாணவி

Added : நவ 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேரலகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசனின் மகள் வர்ஷினி ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர், தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், அதில் ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்ற முயற்சியில், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுத முடிவு செய்தார். அதன்படி எட்டு நாட்களில் இரவு பகல் பாராமல் தலைகீழாக, 1,330 திருக்குறளையும்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேரலகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசனின் மகள் வர்ஷினி ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர், தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், அதில் ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்ற முயற்சியில், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுத முடிவு செய்தார். அதன்படி எட்டு நாட்களில் இரவு பகல் பாராமல் தலைகீழாக, 1,330 திருக்குறளையும் எழுதி முடித்து அசத்தியுள்ளார். இதை கண்ணாடி மூலமாகவே படிக்க முடியும். மாணவி வர்ஷினியை அப்பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். மேலும், இந்த சாதனையை பாராட்டி, சென்னை அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை, விருது வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X