பொது செய்தி

தமிழ்நாடு

உலக மரபு வாரவிழா: தொல்லியல் கருத்தரங்கு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தமிழக அரசு தொல்லியல் துறையும், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்று துறையும், உலக மரபு வாரவிழாவையொட்டி, ஒரு நாள் தொல்லியல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். துறைத் தலைவர் வெங்கடேஸ்வரன் பேசினார். கருத்தரங்கில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன் பேசியதாவது: இந்திய வரலாறு, 15 லட்சம்

கிருஷ்ணகிரி: தமிழக அரசு தொல்லியல் துறையும், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்று துறையும், உலக மரபு வாரவிழாவையொட்டி, ஒரு நாள் தொல்லியல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். துறைத் தலைவர் வெங்கடேஸ்வரன் பேசினார். கருத்தரங்கில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன் பேசியதாவது: இந்திய வரலாறு, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொல்லியல் இன்றி வரலாறு கிடையாது. மனிதர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஆய்வதே அகழாய்வு. கடந்த, 1888ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழாய்வு செய்து, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத்துறை மாணவர்கள், தொல்லியல் கள ஆய்வு மற்றும் அகழாய்வு மூலம் நம்முடைய பண்டைய வரலாற்றை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X