சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
அரியலூர்: அரியலூர் அருகே பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமையாசிரியையும் கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருள்செல்வன், 35, என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவி

அரியலூர்: அரியலூர் அருகே பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமையாசிரியையும் கைது செய்யப்பட்டார்.


அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருள்செல்வன், 35, என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம், 53, தெரிவித்துள்ளார். அவர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரில், மாணவி மற்றும் அருள்செல்வன் ஆகியோரை அழைத்துப் பேசிய தலைமை ஆசிரியை, இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீதும், சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் போலீசார், அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X