பொது செய்தி

தமிழ்நாடு

மழை குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து சரிவு; விவசாயிகள் கவலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், வாணியாறு, வரட்டாறு, சின்னாறு, கேசர்குழி, தொப்பையாறு, தும்பலஹள்ளி, நாகாவதி உள்ளிட்ட, ஏழு அணைகள் மற்றும், ஈச்சம்பாடி அணைக்கட்டு உள்ளது. இதில், வாணியாறு அணை மூலம் நேரடியாக, 10 ஆயிரத்து, 400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஈச்சம்பாடி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில், வாணியாறு, வரட்டாறு, சின்னாறு, கேசர்குழி, தொப்பையாறு, தும்பலஹள்ளி, நாகாவதி உள்ளிட்ட, ஏழு அணைகள் மற்றும், ஈச்சம்பாடி அணைக்கட்டு உள்ளது. இதில், வாணியாறு அணை மூலம் நேரடியாக, 10 ஆயிரத்து, 400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம், 6,250 ஏக்கரும், தொப்பையாறு அணை மூலம், 5,330, வரட்டாறு அணை மூலம், 5,108, சின்னாறு அணை மூலம், 4,500, கேசர் குழி அணை மூலம், 4,000, தும்பலஹள்ளி அணை மூலம், 2,617, நாகவதி அணை மூலம், 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில வாரங்களாக இவ்வணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால், 65.27 அடி உயர வாணியாறு அணை கடந்த, 19ல், 64.29 அடியை எட்டியது. அணைகள் வேகமாக நிரம்பிய நிலையில், வாணியாறு, வரட்டாறு, தொப்பையாறு அணைகளில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று தொப்பையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 63 கன அடியாகவும், வரட்டாறு அணைக்கு, 75 அடி கன அடி நீரும், ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு வினாடிக்கு, 2,595 கன அடியாகவும் நீர்வரத்து இருந்தது. மாவட்டத்திலுள்ள பிற அணைகளுக்கு, பருவமழை காலத்திலேயே நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணை பாசன பரப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X