சுவர் இடிந்து மாணவர் பலி: மக்கள் மறியல்

Added : நவ 25, 2021
Advertisement
கரூர்: கரூர் அருகே, வீடு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; மனைவி மலர்கொடி, மகன்கள் ஆகாஷ், 16; சுனில், 11. நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், சிறுவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை, கரூர் தீயணைப்பு வீரர்கள்

கரூர்: கரூர் அருகே, வீடு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; மனைவி மலர்கொடி, மகன்கள் ஆகாஷ், 16; சுனில், 11. நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், சிறுவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை, கரூர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால், சுனில் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆகாஷ் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கரூர்-திருச்சி சாலை புலியூர் டவுன் பஞ்., அலுவலகம் அருகே, சுனில் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்ககோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., தேவராஜ், தாசில்தார் மோகன் ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். உயிரிழந்த சுனில், ஆறாம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X