பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வாலிபர்கள் இனி ‛‛முரட்டு சிங்கிள்''ஆகத்தான் இருக்கணுமா: குறைகிறது பெண்களின் எண்ணிக்கை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்றிருந்த விகிதம் தற்போது 878 பெண்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தேசிய குடும்பநல ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாலின விகிதம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தியாவில் கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 919
Tamil Nadu, Sex Ratio, Drops, தமிழகம், பாலினம், ஆண்கள், பெண்கள், விகிதம், ஆய்வறிக்கை

சென்னை: தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்றிருந்த விகிதம் தற்போது 878 பெண்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தேசிய குடும்பநல ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாலின விகிதம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தியாவில் கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் என இருந்த நிலையில், 2020-21ம் ஆண்டில் 929 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த பாலின விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும், தமிழகத்தில் இந்த விகிதம் பெருமளவு சரிந்துள்ளது.


latest tamil news


தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் என இருந்தது. ஆனால், தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 878 பெண்கள் என குறைந்துள்ளது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 2019ல் பாலின பிறப்பு விகிதம் 942 ஆக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். பாலின விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், கருகலைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்தால் இந்த விகிதத்தை அதிகரிக்க செய்யலாம் எனவும் பொது சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murali - Madurai,இந்தியா
26-நவ-202122:27:16 IST Report Abuse
Murali இந்த கருத்து கணிப்பு பொய், ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் ஆண்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை மற்றும் நிரந்தர வேலை கை நிறைய சம்பளம் எதிர்பார்க்கிறார்கள் அது தான் பிரச்சனை,
Rate this:
Cancel
Godwin roja - Tamil nadu,இந்தியா
26-நவ-202120:52:50 IST Report Abuse
Godwin roja Please C.M Sir export form other state girls
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202114:49:57 IST Report Abuse
Vittalanand தேனி, உசிலம்பட்டி, சேலம் போன்ற ஊர்களில் பெ ண சிசுக்கொலை நடக்கிறது இது மருத்துவமனைகளில் செவிலியர் உதவியுடன் நடக்கிறது.இதில் அரசு மருத்துவமனைகளும் அடக்கம். "மாமனுக்கு ஆபத்து என்கிற சாக்கில் இரண்டு, அதுக்கு அதிகம்சன பெண்குழந்தைகள் நெல்மணி தொண்டையில் செலுத்தப்பட்டு மூச்சு முட்டி, அல்லது கழுத்து நெறிக்கப்படு கொல்ல படுகின்றன. இதெற்கென இந்த ஊர்களில் கொலை பாட்டிகள் உள்ளனர்.ரர்மதாஸின் கவனத்திற்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X