பொது செய்தி

தமிழ்நாடு

4 சிலிண்டர் வெடித்ததே 5 பேர் இறப்புக்கு காரணம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்: ஒரே நேரத்தில் நான்கு சிலிண்டர் வெடித்ததே, 5 பேர் உயிரிழப்பு, ஆறு வீடுகள் இடிந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.சேலம், கருங்கல்பட்டி, பாண்டுரங்கன் விட்டல் தெருவை சேர்ந்தவர் கோபி, 52. இவர், அப்பகுதியில் பலகார கடை நடத்துகிறார். அதற்கு தேவையான வர்த்தக சிலிண்டர் - 3, வீட்டு உபயோக சிலிண்டர் - 2 வீட்டில் இருந்தன. ஒன்றில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுதும் காஸ் நிரம்பி இருந்தது. இதை

சேலம்: ஒரே நேரத்தில் நான்கு சிலிண்டர் வெடித்ததே, 5 பேர் உயிரிழப்பு, ஆறு வீடுகள் இடிந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.


சேலம், கருங்கல்பட்டி, பாண்டுரங்கன் விட்டல் தெருவை சேர்ந்தவர் கோபி, 52. இவர், அப்பகுதியில் பலகார கடை நடத்துகிறார். அதற்கு தேவையான வர்த்தக சிலிண்டர் - 3, வீட்டு உபயோக சிலிண்டர் - 2 வீட்டில் இருந்தன. ஒன்றில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுதும் காஸ் நிரம்பி இருந்தது. இதை அறியாமல் தூக்க கலக்கத்தில் கோபியின் மாமியார் ராஜலட்சுமி, 80, காபி போட அடுப்பை பற்ற வைத்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்தால், 5 பேர் உயிரிழந்தனர். ஆறு வீடுகள் தரைமட்டமாகின.

இதுகுறித்து, தடயவியல் நிபுணர்கள் கூறியதாவது: ஓர் அறையிலோ, காற்று புகாத இடத்திலோ சிலிண்டர் இருந்தால், ஏற்கனவே அறையில் உள்ள காஸ் தீப்பிடிக்கும் நிலையில், தொடர்ந்து எரிய, அதிகளவில் வெளியே உள்ள ஆக்சிஜனை ஒரே நேரத்தில் அறைக்குள் இழுக்கும். அப்போது, காஸ் நிரம்பிய நிலையில் உள்ள, ஒன்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரே நேரத்தில் நான்கு சிலிண்டர் வெடித்ததே, இந்த விபத்துக்கு காரணம். இதில், ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் சேதமடைந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டரின் சேதமடைந்த பகுதிகள் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் பட்டாசு, வெடி மருந்து, ஜெலட்டின் போன்ற பொருட்கள் வெடித்ததற்கான அறிகுறி, தடயம் இல்லை. கட்டடங்கள் உறுதியற்று இருந்த நிலையில் ஒரே நேரத்தில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் உள்பட நான்கு சிலிண்டர் வெடித்ததே, வீடுகள் தரைமட்டமானதற்கும், உயிர்சேதத்துக்கும் காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏ.டி.ஜி.பி., அஞ்சலி: இந்த விபத்தில், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய, மோட்டார் பராமரிப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இதனால், தமிழ்நாடு தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் விஜய் சேகர் நேற்று காலை, வீடுகள் தரைமட்டமான பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஆய்வில் இருந்த தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகளிடம், விபத்து குறித்து கேட்டறிந்ததோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த பத்மநாபன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பத்மநாபன் படத்துக்கு அஞ்சலி செலுத்தியபோது, வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X