சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி கூரை இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசி அருகே, திடீரென அரசு பள்ளி கட்டட சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மூடுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல், பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி மாடி கட்டடத்தில், கூரையிலிருந்த சிமென்ட் பூச்சு

வந்தவாசி: வந்தவாசி அருகே, திடீரென அரசு பள்ளி கட்டட சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மூடுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல், பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி மாடி கட்டடத்தில், கூரையிலிருந்த சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் மாணவ, மாணவியர் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். பின்னர் தங்கள் குழந்தைகளை பெற்றோர் அழைத்து சென்றனர். பழைய கட்டடத்திற்கு மாற்றாக, வேறு இடத்தில் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X