பொது செய்தி

தமிழ்நாடு

'உத்தரபிரதேசத்தில் 300 இடங்களை பிடித்து மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
வேலூர்: ''உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 300 இடங்களை பிடித்து மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.வேலூரில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உதவி எண்களை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உடனிருந்தார். பின்னர் ராம்தாஸ்

வேலூர்: ''உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 300 இடங்களை பிடித்து மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.


வேலூரில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உதவி எண்களை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உடனிருந்தார். பின்னர் ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எதுவும் சென்றடையவில்லை என, குற்றம் சாட்டுகிறார்; அது தவறானது. அவரால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. உத்தரபிரதேச தேர்தலில் மீண்டும், பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். மத்திய அரசு சார்பில், மலைவாழ் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், மலைவாழ் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. மோடி அரசின் ஜன்தன் யோஜனா திட்டம் மூலம், 43 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் அளித்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தாக்குதல்களும் நடந்து வருகிறது. அதை முதல்வர் தடுக்க வேண்டும். அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஐந்து ஏக்கர் நிலத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வறுமையை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X