பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ‛‛பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும்,'' என நீர்வளத்துறை அமைச்சர் துரைருருகன் கூறினார்.கன மழையினால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையாறு அருகே மேல்பாடி தரைப்பாலம் உடைந்து 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம்
பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன்

ராணிப்பேட்டை: ‛‛பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும்,'' என நீர்வளத்துறை அமைச்சர் துரைருருகன் கூறினார்.
கன மழையினால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையாறு அருகே மேல்பாடி தரைப்பாலம் உடைந்து 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் முறைகேடாக தரைப்பாலங்கள் கட்டப்பட்டதால், வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்துள்ளன. தண்ணீர் குறைந்த பிறகு தான், தரைப்பாலம், குளம் சேதமடைந்தது குறித்து கணக்கெடுத்து சீரமைக்கப்படும். இவ்வளவு மழை வரும் என்று நானும் நினைக்கவில்லை, நீங்களும் நினைக்கவில்லை. பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X