பொது செய்தி

இந்தியா

இந்திய விமானப்படைக்கு மேலும் 2 மிராஜ் போர் விமானங்கள்; பிரான்ஸ் வழங்கியது

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்களை பிரான்ஸ் வழங்கி உள்ளது.பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், சமீபத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் குவாலியர் வந்தடைந்தது. விரைவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், இந்த போர் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட
Miraj, warplane, india, france, jet,

புதுடில்லி: எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்களை பிரான்ஸ் வழங்கி உள்ளது.

பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், சமீபத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் குவாலியர் வந்தடைந்தது. விரைவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், இந்த போர் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.


latest tamil news


மிராஜ் போர் விமானங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தும் நடவடிக்கையின்படி, இந்த 2 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. பல கட்டங்களாக, இதுவரை 51 மிராஜ் விமானங்களை வாங்கியுள்ள விமானப்படை அதனை 3 படைப்பிரிவுகளாக பிரித்து, குவாலியர் விமான படைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 51 மிராஜ் போர் விமானங்களின் திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் உள்ளது. ஆனால், சில விமானங்கள் விபத்திற்குள்ளானதால், சில பாகங்கள் உதிரியாக உள்ளன. இவற்றை, தற்போது வாங்கப்பட்டுள்ள 2 விமானங்களிலும் பயன்படுத்தி, போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news



கடந்த 1980 முதல் மிராஜ் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. கார்கில் போர் முதல் 2019ல் பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இந்த விமானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கார்கில் போரின் போது, டைகர் ஹில்டாப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கும், பதுங்கு குழிகளுக்கும் மிராஜ் விமானங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் இட்டன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.chandrashekar - VELLORE,இந்தியா
26-நவ-202113:45:47 IST Report Abuse
c.chandrashekar பிரான்ஸ் இடம் இருப்பது ரபில் போர் விமானம் தானே .
Rate this:
Cancel
c.chandrashekar - VELLORE,இந்தியா
26-நவ-202113:44:08 IST Report Abuse
c.chandrashekar france idam
Rate this:
Cancel
26-நவ-202108:05:39 IST Report Abuse
அப்புசாமி காங்கிரசுக்கு இத்தாலின்னா, இவிங்களுக்கு ஃப்ரான்சு.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
26-நவ-202116:38:17 IST Report Abuse
JSSஅப்போ திமுகவுக்கு சுவிற்சர்லாண்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X