பொது செய்தி

இந்தியா

சுப்மன், ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம் விளாசல்; முதல்நாளில் இந்திய அணி 258 ரன் குவிப்பு

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021
Share
Advertisement
கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 258/4 ரன் குவித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம் அடித்து கைகொடுத்தனர்.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் துவங்கியது. கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே,
INDvNZ, Test, India, NewZealand, இந்தியா, நியூசிலாந்து, டெஸ்ட், கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, அரைசதம்

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 258/4 ரன் குவித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம் அடித்து கைகொடுத்தனர்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் துவங்கியது. கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவிந்திரா அறிமுகம் ஆகினர். இந்திய அணிக்கு சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. மயங்க் அகர்வால் 13 ரன்னுக்கு ஜேமிசனிடம் அவுட்டானார்.


latest tamil news


புஜாரா, சுப்மன் கில் இணைந்தனர். சுப்மன், டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன் எடுத்த நிலையில் சுப்மன் (52), ஜேமிசன் பந்தில் போல்டானார். புஜாரா (26), சவுத்தீ 'வேகத்தில்' வெளியேறினார். ரகானே (35) போல்டாக, இந்திய அணி 145 ரன்னுக்கு 4 விக்கெட் என திணறத் துவங்கியது.

அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. 5வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த ஸ்ரேயாஸ் (75), ஜடேஜா (50) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது. நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3, டிம் சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X