புஷ்கர் மேளா

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021
Share
Advertisement
ராஜஸ்தானின் துடிப்பான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், 100 ஆண்டுகள் பழமையான புஷ்கர் மேளா கோலகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கொரோனாவால் உற்சாகமிழந்த மக்களை பழைய உற்சாகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த ஆண்டு ஐந்து நாட்கள் விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டது.ஹார்மனி மராத்தான் எனப்படும் ஆன்மீக ஒட்டம்,ஹாட் ஏர் பலுான் சாகச பயணம்,ஒட்டக அலங்காரம்,குதிரை



latest tamil news



ராஜஸ்தானின் துடிப்பான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், 100 ஆண்டுகள் பழமையான புஷ்கர் மேளா கோலகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கொரோனாவால் உற்சாகமிழந்த மக்களை பழைய உற்சாகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த ஆண்டு ஐந்து நாட்கள் விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டது.


latest tamil news


ஹார்மனி மராத்தான் எனப்படும் ஆன்மீக ஒட்டம்,ஹாட் ஏர் பலுான் சாகச பயணம்,ஒட்டக அலங்காரம்,குதிரை நடனப்போட்டி,கைவினைப் பொருட்கண்காட்சி,பராம்பரிய உடையுடன் கிரிக்கெட்,பெரிய மீசை மற்றும் தலைப்பாகை பற்றிய போட்டி,மட்கா ரேஸ்,ஒட்டக ஒட்டம் என்று ஒன்பது நாட்களும் விதவிதமான நிகழ்வுகள் நடந்தன.


latest tamil news


வண்ணங்களின் பிரியர்களான ராஜஸ்தானியர்களின் கலாச்சார நடனங்களை முழுநிலாவின் பின்னனியில் பாலைவனத்து தங்கமணலின் அழகியலுடன் காண்பது என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காணக்குடிய இனிய நிகழ்வு.புஷ்கர் மேளா புஷ்கர் ஏரியில் மகா ஆரத்தியுடன் முடிவடைந்தது அதன் அடையாளமாக பாலத்தின் பக்கம் நடந்த வானவேடிக்கைகள் மகிழ்ச்சி அலைகளை எங்கும் எழுப்பியது.


latest tamil news


மழைவிட்டும் துாவனம் விடாத குறையாக கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஆங்காங்கே மிச்சமிருப்பதால் வெளிநாடு மற்றும் வெளிமாநில விருந்தினர்களின் வருகை குறைவாகவே இருந்தது ஆனாலும் மீண்டு எழுவோம் என்பதன் அடையாளமாக எதையும் விட்டுக்கொடுக்காமல் எதையும் குறைக்காமல் விழாவை சிறப்புற நடத்தி முடித்துள்ளனர்.


latest tamil news


-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X