சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூரில் அரசு பஸ் டூவீலர்கள் மீது மோதியதால் பரபரப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் பேருந்து நிலையம் டிராபிக் சிக்னலில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் டூ வீலர்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதால் பயணம் செய்த வாகன ஒட்டிகள் லேசான சிராய்ப்புகளுடன் உயிர்தப்பினர்.கரூர் பஸ் ஸ்டாண்டு ரவுண்டானா பகுதியில் இன்று (நவ.,25) மதியம் 2.55 மணிக்கு கரூரிலிருந்து மாமரத்துப்பட்டிக்கு அரசு பஸ் சென்ற போது, டிராபிக் சிக்னலில் ரெட் சிக்னல்
கரூரில் அரசு பஸ் டூவீலர்கள் மீது மோதியதால் பரபரப்பு

கரூர்: கரூர் பேருந்து நிலையம் டிராபிக் சிக்னலில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் டூ வீலர்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதால் பயணம் செய்த வாகன ஒட்டிகள் லேசான சிராய்ப்புகளுடன் உயிர்தப்பினர்.

கரூர் பஸ் ஸ்டாண்டு ரவுண்டானா பகுதியில் இன்று (நவ.,25) மதியம் 2.55 மணிக்கு கரூரிலிருந்து மாமரத்துப்பட்டிக்கு அரசு பஸ் சென்ற போது, டிராபிக் சிக்னலில் ரெட் சிக்னல் விழுந்துள்ளது. உடனே அரசு பஸ் டிரைவர் பிரேக் பிடிக்க முயற்சித்துள்ளார். கொட்டும் மழையில் பிரேக் பிடிக்காமல் சென்று, சிக்னலை கடக்க முயற்சித்த இரண்டு டூவீலர்கள் மீது அடுத்தடுத்து மோதி அதன் மீது அரசு பஸ் ஏறி நின்றது.

இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குவிந்து அந்த டிரைவரை இறங்க சொல்லி, போலீஸ் துறையில் பணியாற்றும் டிரைவரை கொண்டு கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்ஸை கொண்டு சென்று நிறுத்தினர். மேலும், மதியம் வேலையில், அதுவும் வாகன நெரிசல்கள் அதிகம் உள்ள நேரத்தில், ரெட் சிக்னல் விழுந்த போது அதை மதித்து பஸ்ஸை நிறுத்த முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டது.

கரூர் பணிமணையிலிருந்து எப்போதும் டவுன்பஸ் மட்டுமே அந்த வழித்தடத்தில் செல்லும் பட்சத்தில், அந்த பஸ்ஸில் ஏதோ, பிரச்னை என்பதால் அதற்கு பதிலாக மாற்று பஸ்ஸை அனுப்பியதால் தான் இந்த விபத்து என்று அந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போலீஸாரின் துரித நடவடிக்கையால் அந்த பஸ்ஸூக்குள் சிக்கிய இரண்டு டூவீலர்களை மீட்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். மயிரிழையில் உயிர்தப்பிய டூவீலர் ஒட்டிகள் 2 பேர் லேசான காயங்களுடன் கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கியதாலும், அங்கே இருந்த பொதுமக்கள் திடீரென்று கூடியதாலும் கரூர் பஸ் ஸ்டாண்டு ரவுண்டானா அருகே சுமார் 30 நிமிடம் பரபரப்பு நீடித்தது மட்டுமில்லாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X