சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, இரண்டு கோவில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, அரங்கம் துருகம் வனப்பகுதியில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு பூசாரி பழனிசாமி, 67, கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, இரண்டு கோவில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, அரங்கம் துருகம் வனப்பகுதியில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு பூசாரி பழனிசாமி, 67, கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போனது தெரியவந்தது. ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆம்பூர் அருகே காரப்பட்டில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு கோவிலை திறக்க பூசாரி மனோகரன், 76, வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கோவிலில் இருந்த ஐந்து அடி உயரம் உள்ள இரண்டு ராமர், லட்சுமணர் கற்சிலைகள் அங்குள்ள கிணற்றில் மர்ம நபர்கள் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உம்மராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X