பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.புதுப்பட்டி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் விவசாய கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் நகையையும் வழங்காமல் கடன் தள்ளுபடி, புதிய கடன் வழங்காமலும் உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கேட்டதற்கு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அலட்சியமாக

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் விவசாய கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் நகையையும் வழங்காமல் கடன் தள்ளுபடி, புதிய கடன் வழங்காமலும் உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கேட்டதற்கு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும் தள்ளுபடியை உடனடியாக நடைமுறை படுத்த கோரியும் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை இரு தினங்களுக்கு முன் முற்றுகையிட்டனர். நேற்று காலை திடீரென, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க அலுவலகத்தில் சென்று கீழே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X