பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடுதல் நேரம் பணியாற்றியதற்கு கூடுதல் ஊதியம் வழங்க கோரி தனியர் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என, 102 பேர் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். இவர்கள் கொரோனா

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடுதல் நேரம் பணியாற்றியதற்கு கூடுதல் ஊதியம் வழங்க கோரி தனியர் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என, 102 பேர் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். இவர்கள் கொரோனா காலத்தில், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்துள்ளதாகவும், அந்த கூடுதல் நேரத்துக்கு கூடுதல் ஊதியம் வழங்க கோரியும் கடந்த மாதங்களில் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, விரைவில் பாக்கி நிலுவைத் தொகையை வழங்குவதாக அவர்களை பணிக்கு அமர்த்திய தனியார் நிறுவனத்தினர் கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால், நேற்றுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக நுழைவு வாயிலில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X