பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்த இணை மின் உற்பத்தி திட்டம் புத்துயிர் பெறுமா?

Added : நவ 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில், 40க்கும் மேற்பட்ட, பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில், 10 தனியார் சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்திடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், 2011ல் பொதுத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், இணை மின் உற்பத்தி திட்டம், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல்: தமிழகத்தில், 40க்கும் மேற்பட்ட, பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில், 10 தனியார் சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்திடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், 2011ல் பொதுத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், இணை மின் உற்பத்தி திட்டம், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 90 கோடி ரூபாய் மதிப்பில், இணை மின் உற்பத்தி செய்வதற்காக பணி துவங்கப்பட்டது. அதில், 10 சதவீதம் விவசாயிகள் பங்கு. இப்பணிகள், 18 மாதங்களில் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பங்குத்தொகையாக, 16 கோடி ரூபாய் மின்வாரியத்திடம் வழங்கப்பட்டது. 60 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தில், கரும்பு அரவைக்கு அனுப்பும் விவசாயிகளிடம் இருந்து டன் ஒன்றுக்கு, 25 ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளில், ஆறு கோடி ரூபாய் அளவுக்கு பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், திட்டப்பணி மேற்கொள்ளாமல் பங்குத்தொகை வீணாகி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது, தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளதால், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்ட திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.


இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில், இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காரணம், தடையின்றி மின்சாரம் கிடைப்பதுடன், அதில் கிடைக்கும் லாபத்தில், குறிப்பிட்ட தொகை கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலையாக வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும், நிதி பிரச்னையில் தவிக்கும் ஆலைகள், மீண்டு வருவதற்கு வாய்ப்பாகவும் அமையும். ஆனால், பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், மேற்கொண்டு எந்த பணியும் நடக்காததால், அனைத்து இரும்பு பொருட்களும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இத்திட்டத்தில், புதுப்பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து, சர்க்கரை ஆலை வரைக்கும், மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணி தான் தொடரவில்லை. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஆலைக்கு, மேலும் நஷ்டத்தை கொடுக்கும் வகையில் இத்திட்டம் முடங்கியுள்ளது. விரைந்து பணிகளை துவக்கி முடித்து மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X