சாலையில் விறகு குவிப்பு; போக்குவரத்துக்கு இடையூறு

Added : நவ 25, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் வழித்தடத்தில் விறகு கொட்டுவது, டூ வீலர்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பள்ளிபாளையம் நான்குசாலை சந்திப்பில் இருந்து செல்லும் ஒட்டமெத்தை வழித்தடத்தில் ஏராளமான ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் டூ வீலரை வரிசையாக நிறுத்துகின்றனர். மேலும் ஓட்டல் கடைக்கு வரும் விறகுகளையும் சாலையிலேயே

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் வழித்தடத்தில் விறகு கொட்டுவது, டூ வீலர்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பள்ளிபாளையம் நான்குசாலை சந்திப்பில் இருந்து செல்லும் ஒட்டமெத்தை வழித்தடத்தில் ஏராளமான ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் டூ வீலரை வரிசையாக நிறுத்துகின்றனர். மேலும் ஓட்டல் கடைக்கு வரும் விறகுகளையும் சாலையிலேயே குவித்து வைக்கின்றனர். இது மையப்பகுதி வரை வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இது மிக குறுகிய சாலை. தற்போது விறகு கொட்டுவது, வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X