பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டம் வேண்டாம்: மாணவியின் தாய் கோரிக்கை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: ''என் மகள் தற்கொலை தொடர்பாக, போராட்டங்கள் நடத்த வேண்டாம்,'' என, அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.கரூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது தாய் நிருபர்களிடம் கூறியதாவது: என் மகள் பாலியல் தொல்லை என கடிதம் எழுதி விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கை, ஆறு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை சரியான

கரூர்: ''என் மகள் தற்கொலை தொடர்பாக, போராட்டங்கள் நடத்த வேண்டாம்,'' என, அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.


கரூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது தாய் நிருபர்களிடம் கூறியதாவது: என் மகள் பாலியல் தொல்லை என கடிதம் எழுதி விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கை, ஆறு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் என் மகள் தற்கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டாம் என, அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம். எதற்காக என் மகள் அப்படி கடிதம் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் நடந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளியில் என் உறவினர்கள் சென்று விசாரித்த போது, அப்படி நடந்ததாக தெரியவில்லை என்கின்றனர். பள்ளியில் இருந்து வரும் போதுதான், ஏதாவது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X