பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு வாரம்: கலெக்டர் தகவல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: '' கரூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும்,'' என, கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.கரூரில் தற்கொலை கொண்ட பிளஸ் 2 மாணவி வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க, நேற்று ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். காளிப்பாளையம் பகுதியில், எஸ்.பி., சுந்தர

கரூர்: '' கரூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும்,'' என, கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.


கரூரில் தற்கொலை கொண்ட பிளஸ் 2 மாணவி வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க, நேற்று ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். காளிப்பாளையம் பகுதியில், எஸ்.பி., சுந்தர வடிவேல் தலைமையிலான போலீசார், கலெக்டர் இங்கு வர உள்ளதாக கூறி தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில், அங்கு வந்த கலெக்டர் பிரபு சங்கர், மாணவ, மாணவியர் மத்தியில் பேசியதாவது: மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக ஆறு தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளி சமூகத்தில் எந்த இடத்தில், இருந்தாலும் நடவடிக்கை உறுதி. பல மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் தொல்லை இருந்தால் புகாரளிக்க தனி மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவியரிடம், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நாளை முதல் (இன்று) பெண்கள் பாதுகாப்பு வாரம் நடத்தப்பட உள்ளது. நான், எஸ்.பி., டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நேரிடையாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X