பொது செய்தி

தமிழ்நாடு

2024 வரை பெயர் பதிவு செய்ய கால அவகாசம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் தகவல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: 'குழந்தைகள் பெயர் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், 2024 டிச., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் பேசினார்கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் தேவசேனாபதி தலைமை வகித்து பேசியதாவது:

கரூர்: 'குழந்தைகள் பெயர் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், 2024 டிச., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் பேசினார்


கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் தேவசேனாபதி தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகளின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமை. பெயர் பதிவு இல்லா சான்றிதழ்கள் உபயோகமற்றது என்பதால், சம்பந்தப்பட்ட பதிவாளரை அணுகி பெயர் பதிவு மேற்கொள்ள வேண்டும். பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து, 12 மாதங்கள் வரை கட்டணமின்றி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 12 மாதத்திற்கு பின், 15 ஆண்டுகள் வரை தாமத கட்டணம், 200 ரூபாய். பெயர் பதிவு செய்ய கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், 2024 டிச., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம். மேலும், 2018 ஜன.,1க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை, https://www.crstn.org/birth_death_tn/ என்ற இணையதளத்தில் கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கொரோனா நோயில் இறந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வசதியாக மாவட்டம் தோறும், அந்தந்த கலெக்டர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற இயலாத நிலையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் மனு அளிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., லியாகத் அலி, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக உதவி இயக்குனர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X