பொது செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மின்துறை அமைச்சர் அழைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: 'தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி நடக்கிறது' என, கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும், 27, 28 காலை, 8:30 மணிக்கு கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், இரண்டாவது

கரூர்: 'தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி நடக்கிறது' என, கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும், 27, 28 காலை, 8:30 மணிக்கு கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 75 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக, 50 ஆயிரம் ரூபாய், நான்காவது பரிசாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். போட்டியில், கரூர் மாவட்ட வீரர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். போட்டியில் பங்கு பெற விரும்பும் அணிகள், மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நாளை (26ம் தேதி) மாலை, 5:00 மணிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X