பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டம்: அரசு கல்லூரிக்கு விடுமுறை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் மாணவ, மாணவியர் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு கலைக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. கரூரில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, 'பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த, 19ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பாலியல் குற்றவாளியை கைது செய்யக்கோரி, கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கடந்த, இரண்டு

கரூர்: கரூரில் மாணவ, மாணவியர் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு கலைக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. கரூரில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, 'பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த, 19ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பாலியல் குற்றவாளியை கைது செய்யக்கோரி, கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கடந்த, இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கோரிக்கை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இதனால், நேற்று முதல் வரும், 27 வரை கல்லூரிக்கு விடு முறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அரசு கலைக்கல்லூரி பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X