பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: 'டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும், டாக்டர் அம்பேத்கர் விருது, திருவள்ளுவர் திருநாள் விழாவின் போது வழங்கப்படுகிறது. அதன்படி, 2022ம் ஆண்டிற்கான இந்த விருது வழங்கப்பட உள்ளது.

கரூர்: 'டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும், டாக்டர் அம்பேத்கர் விருது, திருவள்ளுவர் திருநாள் விழாவின் போது வழங்கப்படுகிறது. அதன்படி, 2022ம் ஆண்டிற்கான இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் தங்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய விபரங்களுடன் கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X