பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் தாவல்: மாவட்ட பஞ்., தலைவர் பதவிக்கு ஆபத்து

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர், திடீரென, தி.மு.க., வில் இணைந்தார். இதனால், அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசனின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.கடந்த, 2019ல் நடந்த கரூர் மாவட்ட பஞ்., கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஒன்பது பேரும், தி.மு.க., சார்பில் மூன்று பேரும் வெற்றி பெற்றனர். மாவட்ட பஞ்., தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக தானேஷ்

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர், திடீரென, தி.மு.க., வில் இணைந்தார். இதனால், அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசனின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


கடந்த, 2019ல் நடந்த கரூர் மாவட்ட பஞ்., கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஒன்பது பேரும், தி.மு.க., சார்பில் மூன்று பேரும் வெற்றி பெற்றனர். மாவட்ட பஞ்., தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக தானேஷ் முத்துகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட தானேஷ் முத்துகுமார் ராஜினாமா செய்ததால், காலியாக இருந்த வார்டில், தி.மு.க., சார்பில் கண்ணையன் வெற்றி பெற்றார். தி.மு.க., வின் பலம் நான்காக உயர்ந்தது. இந்நிலையில், புகையிலை பொருட்களை விற்றதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மனோகரன், அவரது மனைவியும், 2 வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான அலமேலுவும் கடந்த, 18ல், தி.மு.க., வில் இணைந்தனர். இதையடுத்து, தி.மு.க.,வின் பலம், ஐந்தாக உயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்ட, 10வது வார்டு பஞ்., கவுன்சிலர் நல்லமுத்து, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, தி.மு.க., வில் இணைந்தார். தி.மு.க., வின் பலம், ஆறாக உயர்ந்துள்ளது. தற்போது, தி.மு.க., சார்பில் ஆறு பேரும், அ.தி.மு.க., சார்பில் ஆறு பேரும் உள்ளனர் மேலும், ஒரு அ.தி.மு.க., கவுன்சிலர், தி.மு.க., வுக்கு தாவும் பட்சத்தில், மாவட்ட பஞ்., தலைவர் கண்ணதாசனின் பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X