தமிழ்நாடு

இயற்கை விவசாயிகளுக்கு தனி அடையாளம்! அங்கக சான்றுக்கு பதிவு செய்ய அழைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆனைமலை: கோவை மாவட்ட விவசாயிகள், அங்கக சான்று பெற்று சந்தை வாய்ப்பை பெருக்கிக்கொள்ள, அங்கக சான்றளிப்புத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, அதிகப்படியான ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரம் பயன்படுத்துவதால், மக்களுக்கு பலவித பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனால், இயற்கை முறையில் விளைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென, விழிப்புணர்வு


ஆனைமலை: கோவை மாவட்ட விவசாயிகள், அங்கக சான்று பெற்று சந்தை வாய்ப்பை பெருக்கிக்கொள்ள, அங்கக சான்றளிப்புத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, அதிகப்படியான ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரம் பயன்படுத்துவதால், மக்களுக்கு பலவித பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனால், இயற்கை முறையில் விளைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென, விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.இதனால், இயற்கை உரங்களைக்கொண்டு விளைந்த பொருட்கள், சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகிறது.இயற்கை விவசாயிகளுக்கு தனி அடையாளம் வழங்க, சந்தை வாய்ப்பை பெருக்குவதற்காக இயற்கை விளைபொருட்களுக்கு, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத்துறை சார்பில், அங்கக (ஆர்கானிக்) சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயிகள், பதிவு செய்து பயன்பெற அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.கோவை அங்கக சான்றளிப்புத்துறை அறிக்கை:ஆண்டுதோறும் அங்கக சான்றுக்கு பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016ல் தமிழகம் முழுவதிலும் இருந்து, 146 விவசாயிகள், 2,710 ஏக்கருக்கு பதிவு செய்தனர்.கடந்த, 2017ல், 376 விவசாயிகள், 3,291 ஏக்கருக்கு பதிவு செய்தனர். கடந்தாண்டு, 5,929 விவசாயிகள், 66 ஆயிரத்து, 881 ஏக்கருக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்வோர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவு அதிகரித்துள்ளது.அங்கக சான்று வைத்திருக்கும் விவசாயிகளின், விளைபொருட்களுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருகிறது. விளைபொருட்களை எளிதாக, இயற்கை அங்காடி, டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்.அதேபோல், ஏற்றுமதியும் செய்யலாம். பல சந்தை வாய்ப்புகள் உள்ளன.
கோவை தடாகம் ரோட்டில், ஜி.சி.டி.,ல் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குனர் அலுவலகம் உள்ளது.கோவை மாவட்ட விவசாயிகள், அங்கக சான்று பெற இங்கு பதிவு செய்யலாம். www.tnocd.net என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம். மேலும், தகவல்களுக்கு, 0422 - -2982985, 0422 - -2435080 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் தகவல் தெரிவித்து பதிவு செய்யலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X