பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை: அலட்சியத்தால் தொடர் விபத்து

Added : நவ 25, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் தொடர் விபத்துக்கள் நடக்கிறது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. இவ்வழியாக, கனரக வாகன போக்குவரத்தும் அதிகமுள்ளது. இந்நிலையில், மடத்துக்குளம் சினிமா தியேட்டர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நீர் தேங்கி, ரோடு பாதிக்கப்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்,
 பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலை:  அலட்சியத்தால் தொடர் விபத்து



மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் தொடர் விபத்துக்கள் நடக்கிறது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. இவ்வழியாக, கனரக வாகன போக்குவரத்தும் அதிகமுள்ளது. இந்நிலையில், மடத்துக்குளம் சினிமா தியேட்டர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நீர் தேங்கி, ரோடு பாதிக்கப்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர்கள் நிலை தடுமாறுகின்றனர்.நேற்று காலை டூவீலரில் வந்த நபர் பள்ளத்தில் இறங்காமல் இருக்க வண்டியை ஒதுக்கி ஓட்டிய போது பின்னால் வந்த வாகனம் மோதி ரோட்டில் விழுந்து காயமடைந்தார்.இதுபோல நீண்ட தொலைவில் இருந்து வருபவர்களுக்கும், முதன்முறையாக இந்த ரோட்டை பயன்படுத்துபவர்களும் பள்ளம் உள்ளது தெரியாமல் தடுமாறி தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது. டூவீலரில் பயணிப்பவர்கள் பள்ளத்தில் சக்கரம் இறங்கும்போது, பேலன்ஸ் தவறி விழுந்து காயமடைகின்றனர்.நிமிடத்திற்கு, 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற பள்ளங்களால் பெரிய விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியத்தை கைவிட்டு, பள்ளத்தை சரி செய்ய வேண்டும். மழைக்காலத்தில், ரோட்டில், தண்ணீர் தேங்காமல், வடிகால் வசதியை ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X