துளிகள் செய்தி

தமிழ்நாடு

கோமாரி நோய் தடுப்பூசி 83 சதவீத பணி நிறைவு

Added : நவ 25, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை கோட்டத்தில், இதுவரை, 52 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான, 2வது தவணை தடுப்பூசி தற்போது போடப்படுகிறது. உடுமலை

உடுமலை: உடுமலை கோட்டத்தில், இதுவரை, 52 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான, 2வது தவணை தடுப்பூசி தற்போது போடப்படுகிறது. உடுமலை கோட்டத்தில், 60 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர், முகாம் அமைத்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை, 52 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கு டிச., முதல் வாரத்தில் தடுப்பூசி போடப்படவுள்ளது.கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது: கோமாரி தடுப்பூசி பணிக்காக, கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் அடங்கிய, 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி மற்றும் பால் சேகரிப்பு மையங்கள் வாயிலாக முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதால், குழுவினர், வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு நேரடியாகவும் செல்கின்றனர். இதுவரை தடுப்பூசி போடாத பசு, எருமைகள் இருந்தால் அருகில் உள்ள அரசு கால்நடை நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X