ஒரு போன் போதுமே!

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லாங்குழி ரோடுகள்ஆனைமலை, சேத்துமடை அண்ணாநகரில், பல ரோடுகள் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். அருண்குமார், சேத்துமடை.பாலத்தை புதுப்பிக்கணும்!ஆனைமலை, பெத்தநாயக்கனுார் --- பொள்ளாச்சி ரோட்டில், ஜமீன்கோட்டாம்பட்டி வழித்தடத்திலுள்ள தரைமட்ட பாலம் சிதிலமடைந்து

பல்லாங்குழி ரோடுகள்ஆனைமலை, சேத்துமடை அண்ணாநகரில், பல ரோடுகள் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். அருண்குமார், சேத்துமடை.பாலத்தை புதுப்பிக்கணும்!ஆனைமலை, பெத்தநாயக்கனுார் --- பொள்ளாச்சி ரோட்டில், ஜமீன்கோட்டாம்பட்டி வழித்தடத்திலுள்ள தரைமட்ட பாலம் சிதிலமடைந்து உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். ஜெயகுமார், பெத்தநாயக்கனுார்.
கழிப்பிடங்களை திறக்கலாமே!வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பொதுக்கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காக அக்கழிப்பிடங்களை திறக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மா.ஆதி, வால்பாறை.வேகத்தை கட்டுப்படுத்தணும்!கிணத்துக்கடவு - - காட்டம்பட்டி ரோடு, வடசித்துார் நான்கு ரோடு சந்திப்பில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகன போக்குவரத்து அதிகமுள்ளதால், அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.என். சுகுமார், வடசித்துார்.ரோடெல்லாம் மழைநீர்பொள்ளாச்சி, சி.டி.சி., காலனி ராம் நகர் ரோடு பராமரிப்பு இன்றி, படு மோசமாக சிதைந்துள்ளது. ரோட்டில், மழை நீர் வெள்ளமாக ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வடிகால், ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.பி.பழனிசாமி, பொள்ளாச்சி.தெருநாய்களால் தொல்லைமடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் நடந்து செல்லக்கூட சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்.கு.குப்புசாமி, குமரலிங்கம்.நெடுஞ்சாலையில் அதிவேகம்மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, வேகக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும்.கா.ராமசாமி, மடத்துக்குளம்.கழிவு நீரால் அவதிஉடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பைபாஸ் ரோட்டில், பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறி, ரோட்டில் வெள்ளமாக செல்வதால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.த.சித்ராதேவி, உடுமலை.பள்ளத்தால் விபத்துஉடுமலை -- திருப்பூர் ரோடு சந்திப்பில், பெரிய பள்ளம் ஏற்பட்டு, ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அந்த ரோட்டுக்கு திரும்பும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.சு.மகேந்திரன், உடுமலை.மழை நீர் தேக்கம்உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், ஆங்காங்கே மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்.என். தங்கவேல், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X