மும்பை வந்த 'மாஜி' கமிஷனரிடம் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை :நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் இன்று (நவ.25) மும்பை திரும்பினார். குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்.மஹாராஷ்டிராவில் மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் பணியிட மாற்றம்
மும்பை ,மாஜி' கமிஷனரிடம் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி

மும்பை :நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் இன்று (நவ.25) மும்பை திரும்பினார். குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்.
மஹாராஷ்டிராவில் மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, பரம்வீர் சிங் ஊழல் புகார் கூறினார்.


latest tamil news



இதையடுத்து அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை இழந்ததுடன், அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.இதற்கிடையே போலீஸ் அதிகாரி பரம்வீர் சிங், மிரட்டி பணம் பறித்ததாக, மும்பையின் கோரேகாவ்ன் உட்பட பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் பரம்வீர் சிங் பணிக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அவரை குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் பரம்வீர் சிங்கை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தர விட்டது. அவரை உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதை ஏற்று பஞ்சாபின் சண்டிகரில் இருந்து பரம்வீர் சிங் விமானம் வாயிலாக இன்று மும்பை வந்தார். அவரிடம் 7 மணி நேரம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
26-நவ-202116:40:32 IST Report Abuse
DVRR டப்பா அடிப்பதில் டாஸ்மாக்கினாடா இல்லை மகாராஷ்டிரா அரசா ஒருத்தனை மிஞ்சி ஒருவன் எல்லா தகிடுதத்தத்திலும் போலீசாம் ஊழலே செய்யவில்லையாம்
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
26-நவ-202110:50:38 IST Report Abuse
ஜெயந்தன் " அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அவரை குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது."...போலீசே ... குற்றவாளி போலீசை கண்டுபிடிக்க முடியவில்லையா... பேஷ்..பேஷ்...இதெல்லாம் நாங்க நம்பனும்...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-நவ-202107:59:28 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவருடைய எல்லா சலுகைகளையும் பறிக்க வேண்டும். சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். இவருக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்
Rate this:
sankar - Nellai,இந்தியா
26-நவ-202111:32:42 IST Report Abuse
sankarயாருக்கு - லஞ்சம் கேட்ட அமைச்சருக்குத்தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X