சீமை கருவேல மரங்கள் நங்காஞ்சி ஆற்றில் ஆக்கிரமிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: நங்காஞ்சி ஆற்றிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரவக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை புங்கம்பாடி சாலை, நங்காஞ்சி பாலத்திற்கு மேற்கு கரையில் உள்ளது. மருத்துவமனையின் பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் எங்கு பார்த்தாலும் சீமைகருவேல முட்புதர்கள் மண்டியுள்ளன. இங்கு, ஆறே தெரியாத அளவிற்கு சீமைகருவேல முள் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் மழைநீர்,

கரூர்: நங்காஞ்சி ஆற்றிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரவக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை புங்கம்பாடி சாலை, நங்காஞ்சி பாலத்திற்கு மேற்கு கரையில் உள்ளது. மருத்துவமனையின் பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் எங்கு பார்த்தாலும் சீமைகருவேல முட்புதர்கள் மண்டியுள்ளன. இங்கு, ஆறே தெரியாத அளவிற்கு சீமைகருவேல முள் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் மழைநீர், சாக்கடை மற்றும் கழிவு நீர் அனைத்தும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. நோய் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையிலுள்ள உள் நோயாளிகள் கொசுக்கடியினால் அவதிப்படுகின்றனர். குமராண்டான் வலசு ஈஸ்வரன் கோவிலில் இருந்து கரடிப்பட்டி வரை நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையோரம் போலீஸ் குடியிருப்பு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மக்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகிலேயே ஆற்றில் தேங்கி நிற்கும் மழை நீர், கழிவு நீரினால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நங்காஞ்சி ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X