பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர் - கோவை மின் வழித்தடம் விரைந்து முடிக்க அரசு முயற்சிக்குமா?

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:விருதுநகர் - கோவை இடையில் 765 கிலோ வோல்ட் திறனில் மின் வழித்தடம் அமைக்க சிலர் முட்டுக்கட்டை போடுவதால், தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல பகுதிகளுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகிஉள்ளது.தமிழக மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டத்தில் வட சென்னை - 3, எண்ணுார் சிறப்பு என்ற பெயரிலும்; துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலும் புதிய அனல் மின்

சென்னை:விருதுநகர் - கோவை இடையில் 765 கிலோ வோல்ட் திறனில் மின் வழித்தடம் அமைக்க சிலர் முட்டுக்கட்டை போடுவதால், தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல பகுதிகளுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகிஉள்ளது.
தமிழக மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டத்தில் வட சென்னை - 3, எண்ணுார் சிறப்பு என்ற பெயரிலும்; துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலும் புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.


முட்டுக்கட்டை

தென் மாவட்டங்களில், பல நிறுவனங்கள் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்க வேண்டி உள்ளது.இதற்காக மின் வாரியம், வட சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலுார், கோவை, விருதுநகர் ஆகிய இடங்களில், தலா 765 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையங்கள் அமைக்கிறது. இவை, அதே திறன் உடைய மின் கோபுர வழித்தடத்திலும் இணைக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடம் 5,000 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லும் திறன் உடையது. வடசென்னை, அரியலுார், விருதுநகர் துணைமின் நிலையங்களின் கட்டுமான பணி நடந்து வருகிறது. வடசென்னை - அரியலுார் 270 கி.மீ., மின் வழித்தட பணி முடியும் தருவாயில் உள்ளது.கோவை - விருதுநகர் 252 கி.மீ., வழித்தடமானது, திருப்பூர் தாராபுரம், திண்டுக்கல் பழநி, ஒட்டன்சத்திரம், செம்பட்டி போன்ற இடங்களுக்கு இடையில் அமைக்கப்படுகிறது. கோவையில் துணை மின் நிலைய கட்டுமான பணி துவங்கவில்லை.
இருப்பினும், விருதுநகரில் இருந்து கோவைக்கு மின் வழித்தடம் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழித்தடம் அமைக்க சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.இது குறித்து மின் ஊழியர்கள் கூறியதாவது:கோவையில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். அதை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இழப்பீடு

மத்திய அரசின் 'பவர்கிரிட்' நிறுவனம், வேலுாரில் உள்ள திருவலம்; திருப்பூரில் உள்ள சிறுகனாரில் அதிக திறனில் துணை மின் நிலையங்கள் அமைத்துள்ளது. அவற்றுக்கு பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வருகிறது.பவர்கிரிட் துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை பெற, அவற்றுக்கு அருகில் மின் வாரியம் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும். அதன்படி, அரியலுார் துணை மின் நிலையத்தில் இருந்து, திருவலத்திற்கு மின் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், திருவலம் துணை மின் நிலையத்திற்கு வரும் பிற மாநில மின்சாரத்தை, விருதுநகருக்கு எடுத்து செல்லலாம். விருதுநகர் துணை மின் நிலையத்திற்கு வரும் மின்சாரத்தை கோவை, அரியலுார், திருவலம், வடசென்னை என, பல பகுதிக்கு அனுப்பலாம். மின் கோபுர அடித்தள பகுதிக்கு நிலம் வழங்கினால் 100 சதவீதமும்; மின் பாதை கீழ் பகுதிக்கு 20 சதவீதமும் இழப்பீடு தரப்படுகிறது. வழிகாட்டு மதிப்பு அல்லது சந்தை விலையில் எது அதிகமாக உள்ளதோ, அதுவே இழப்பீடாக வழங்கப்படுகிறது.
அப்படி இருந்தும் விருதுநகர் - கோவை 765 கி.வோ., மின் வழித்தடம் செல்லும் பாதையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அதிக இழப்பீடு கேட்டும், விவசாயிகள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் துறையினர் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எனவே, அரசு சிறப்பு கவனம் செலுத்தி, அந்த வழித்தட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X