பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பராமரிப்புக்கு புதிய வழிமுறை

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பராமரிப்பதற்கு, ரியல் எஸ்டேட் சட்டப்படி, புதிய வழிமுறைகளை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்த உள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்புகளை விலைக்கு வாங்கும் ஒதுக்கீட்டாளர்கள், அதை முறையாக பராமரிக்க, உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதில்லை.இதனால்,

சென்னை:வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பராமரிப்பதற்கு, ரியல் எஸ்டேட் சட்டப்படி, புதிய வழிமுறைகளை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்புகளை விலைக்கு வாங்கும் ஒதுக்கீட்டாளர்கள், அதை முறையாக பராமரிக்க, உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதில்லை.இதனால், பெரும்பாலான இடங்களில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
சராசரியாக, 70 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டிய குடியிருப்புகள், 30 ஆண்டுகளிலேயே சிதிலமடைகின்றன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட வரம்புக்குள், வீட்டுவசதி வாரிய திட்டங்களும் வருவதால், பராமரிப்பு தொடர்பான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக, வீட்டுவசதி வாரிய திட்டங்கள் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யப்படுகின்றன.
இதனால், ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின்படி வாரியம் செயல்பட வேண்டியது கட்டாயம்.இது குறித்து வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின்படி வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு விற்பனையின் போது, சில புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதன்படி, ஒவ்வொரு குடியிருப்பிலும் பெரும்பாலான வீடுகள் விற்கப்பட்ட நிலையில், உரிமையாளர்களை உறுப்பினர்களாக சேர்த்து புதிய சங்கம் ஏற்படுத்தப்படும்.மேலும், வீடுகள் விற்பனையின் போது, குறிப்பிட்ட ஒரு தொகை வசூலிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஆதாரம் ஏற்படுத்தப்படும். இந்த நிதியை பயன்படுத்தி, சங்க நிர்வாகிகளே குடியிருப்புகளை பராமரிக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X