பொது செய்தி

தமிழ்நாடு

விருப்ப இடமாறுதல் நிபந்தனைகள் தளர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆனால் தான், விருப்ப இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை, தற்போது ஓராண்டாக குறைக்கப் பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், நேரடியாக வேலைக்கு சேர்ந்தவர்களும், உள்முக தேர்வு வாயிலாக பதவி உயர்வு பெற்றவர்களும், வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகளான பின்னே, விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க முடியும்.மூன்று

சென்னை:வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆனால் தான், விருப்ப இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை, தற்போது ஓராண்டாக குறைக்கப் பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், நேரடியாக வேலைக்கு சேர்ந்தவர்களும், உள்முக தேர்வு வாயிலாக பதவி உயர்வு பெற்றவர்களும், வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகளான பின்னே, விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க முடியும்.மூன்று ஆண்டுகளை முடித்தவர்கள் பணிபுரியும் வட்டத்திற்குள் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என, 2019ல் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், கை குழந்தைகளை வைத்திருப்போர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என, பலரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள், விருப்ப இடமாறுதலுக்கான கால அளவை தளர்த்துமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நேரடி நியமனம் மற்றும் உள்முக தேர்வு வாயிலாக நியமிக்கப்பட்டவர்கள், வேலைக்கு சேர்ந்த ஓராண்டுக்கு பின், விருப்ப இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X