பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்: நவோஜித் சிங் சித்து

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என நவோஜித் சிங் சித்து தெரிவித்துள்ளார்.பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போதைப்பொருள் சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றால்தான் உண்ணாவிரத போராட்டம் இருக்க

சண்டிகர்: பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என நவோஜித் சிங் சித்து தெரிவித்துள்ளார்.



latest tamil news



பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போதைப்பொருள் சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றால்தான் உண்ணாவிரத போராட்டம் இருக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரசுக்குள் பல காலமாக உட்கட்சி பூசல் ஏற்பட்டு வருகிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உடன் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்து பின்னர், புது கட்சி துவங்கினார்.
பின்னர் காங்கிரஸ் தலைமை ரஞ்சித் சிங்கை புதிய முதல்வராக நியமித்தது. ஆனாலும் சித்து தொடர்ந்து தனது போராட்டத்தை நிறுத்தவில்லை. புதிய முதல்வருக்கு எதிராக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான முறைகேடு ஏற்பட்டது. இது குறித்த ஆவணங்கள் பஞ்சாப் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. இந்த ஆவணங்களை குறித்த விவரங்களை பஞ்சாப் காங்கிரஸ் குடிமக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.


latest tamil news



முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் அரசு இதனை வெளியிட மறுத்த நிலையில் தற்போது சரண்ஜித் அரசும் வெளியிடவில்லை. இதனையடுத்து இதனை வெளியிடும் வரையில் தான் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை அடியோடு ஒழிப்போம் எனக் கூறியே காங்கிரஸ் முன்னதாக ஆட்சியைப் பிடித்தது என்றும் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும்வரை தான் ஓயப்போவதில்லை என்றும் சித்து உறுதிபடத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
26-நவ-202119:11:59 IST Report Abuse
கௌடில்யன் போதைக்கு அடிமையான இளைஞர்களை அந்த பழக்கத்திலிருந்து விடுபட டில்லியிலிருந்து சம்மோக ஆர்வலர்கள் பஞ்சாபில் தங்கி தங்கள் பணியை ஆரம்பித்தார்கள் ..ஒரு மாதம் கழித்து பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் ...
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
26-நவ-202116:42:50 IST Report Abuse
JSS ஐயா சித்து பஞ்சாபில் போதை பொருள் ஒழியவேண்டுமானால். உன்னால் நண்பர் இம்ரான் கான் கோலோச்சும் பாக்கிஸ்தான் ஒழிய வேண்டும். அப்போதுதான் பஞ்சாபில் போதை பொருள் ஒழியும், என்ன சம்மதமா
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
26-நவ-202116:30:32 IST Report Abuse
DVRR யாரு சொல்றதுன்னு ஒரு வரைமுறையே இல்லையா அதன் ஊற்றுக்கண்ணே நீ உன்னை சார்ந்த முஸ்லீம் நேரு காங்கிரஸ் கட்சி நீ அதை ஒழிக்கப்போறியா??? ஒளித்து வைத்துக்கொள்ளப்போகிறோம் என்று சொல் சரியாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X