புது பாசம்!

Added : நவ 25, 2021
Share
Advertisement
புது பாசம்!தேச சுதந்திர போராட்ட தியாகிகளை சில கட்சிகள் எங்க தலைவர், உங்க தலைவர்னு பிரிச்சிக்கிட்டாங்க போல. ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள கை காரங்க கட்சி ஆபிசில், முதல் பெண் பிரதமரோட 'பர்த் டே' கொண்டாடினாங்க. அந்த பங்ஷனில் சர்தார் வல்லபபாய் படத்தையும் திறந்து, ரெண்டு பேரின் பர்த் டே வையும் கொண்டாடிடலாம்னு ஒரு தலைவரு ஆலோசனை சொல்லி இருக்காரு. ஆனால் அதை முக்கிய தலைவரு

புது பாசம்!
தேச சுதந்திர போராட்ட தியாகிகளை சில கட்சிகள் எங்க தலைவர், உங்க தலைவர்னு பிரிச்சிக்கிட்டாங்க போல. ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள கை காரங்க கட்சி ஆபிசில், முதல் பெண் பிரதமரோட 'பர்த் டே' கொண்டாடினாங்க. அந்த பங்ஷனில் சர்தார் வல்லபபாய் படத்தையும் திறந்து, ரெண்டு பேரின் பர்த் டே வையும் கொண்டாடிடலாம்னு ஒரு தலைவரு ஆலோசனை சொல்லி இருக்காரு. ஆனால் அதை முக்கிய தலைவரு ஏத்துக்கல. அது நம்முடைய பழக்கமே இல்லைனு தடுத்து பார்த்தாரு. ஆனால், சர்தாரு, பூ காரங்களுக்கு மட்டும் தான் சொந்தமான்னு கேட்டு வம்பிழுத்துள்ளார்.
எதுக்கு வீணான வாதம்னு, சர்தார் படத்தையும் திறந்து வைத்து பங்ஷன் முடிச்சாங்க. பூக்காரங்க இப்போ கேலி செய்ய மாட்டாங்களா. இதென்ன புதுசா சர்தார் மேலே பாசம்னு கொக்கி போட மாட்டாங்களா. இன்னும் யார்யார் படமெல்லாம் திறந்து வைத்து வணங்க போறாங்களோன்னு தொண்டர்கள் கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க.
வெளிநாட்டில் 'ரெஸ்ட்'
கர்நாடகாவில் பாப்புலரான, ரொம்போ பிஸியான ஹீரோயினு, தெலுங்கிலும் 'வந்தேனு'ன்னு கொடிக் கட்டி பறந்தாரு. ஓ... ஹோன்னு இருக்கிற இவருக்கு, வெள்ளித்திரையில ஓய்வு தேவைப்படுதாம். அதனால் சில காலம் 'பாரின்' சென்று ஓய்வெடுக்க போறாராம்.தனியா இருக்காம, உறவுக்காரங்களோ அல்லது அவரோட நெருங்கிய வட்டமும் கூட உடன் இருக்கலாமென தெரியுது.டிசம்பர் 10 வரை 'வெயிட்டிங்'
சட்ட மேலவையில பூக்காரங்க தயவில் உள்ள புல்லுக்கட்டுக்காரர் 'பதவி' தேர்தல் முடிவுக்கு பின் நீடிக்குமா அல்லது பதவியிலிருந்து நீக்கிடுவாங்களான்னு மதில் மேல் பூனை கதையா இருக்குது.தேர்தலின் முடிவில் பூக்காரங்களுக்கு மெஜாரிட்டி கிடைச்சிடும்னு பூக்காரங்க நம்புறாங்க. இவங்களோட நம்பிக்கைப்படி பெரும்பான்மை பலம் அமைந்தால், புல்லுக்கட்டுக் காரர் தலைவர் பதவி அவுட்டாகும். தக்க வைக்க வெயிட்டான 'பிளான்' எதுவும் இப்போதைக்கு இல்லையாம். புதுசா யோசிக்க போறாங்களாம்
சங்கு ஊத போறாரு!
புல்லுக்கட்டு கட்சிக்கென பிரச்சாரம் செய்ய தனியா, ஸ்டார் தலைவரு யாருமில்லையாம். அதனால் அக்கட்சியின் 'மாஜி' சி.எம்., தான் எல்லாமே. எனவே சீட் செலக் ஷன், முதல் ஓட்டு சேகரிப்பு வரை எல்லா பொறுப்பும் தானே வைத்திருப்பதால் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் தானே சங்கு ஊதனும்னு அவரே சொல்லி இருக்காரு. இந்த 'சங்கு ஊதல்' எதுக்குன்னு தேர்தல் முடிவு தெரிவிச்சிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X