பொது செய்தி

இந்தியா

மீண்டும் கன்னடம் - இந்தி மோதல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம் என்றால், யஷ் நடிக்கும் 'கே.ஜி.எப்., -2' .படப்பிடிப்பு முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், திரைக்கு வர காலம் கூடி வரவில்லை. 2022 ஏப்ரல் 14ல், உலகம் முழுவதும், திரைக்கு வருமென, படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதே நாளில் அமிர்கான் நடித்த 'லால்சிங் சட்டா' திரைக்கு வருகிறது. 2018ல் 'கே.ஜி.எப்.,'
 மீண்டும் கன்னடம் - இந்தி மோதல்

கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம் என்றால், யஷ் நடிக்கும் 'கே.ஜி.எப்., -2' .படப்பிடிப்பு முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், திரைக்கு வர காலம் கூடி வரவில்லை. 2022 ஏப்ரல் 14ல், உலகம் முழுவதும், திரைக்கு வருமென, படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதே நாளில் அமிர்கான் நடித்த 'லால்சிங் சட்டா' திரைக்கு வருகிறது. 2018ல் 'கே.ஜி.எப்.,' ஷாருக்கானின் 'ஜீரோ' ஒரே நேரத்தில் திரைக்கு வந்தது. 'ஜீரோ' தோல்வியடைந்தது. 'கே.ஜி.எப்.,' வசூலை குவித்தது. இப்போது மற்றொரு முறை கன்னடம், இந்தி படங்கள் மோத தயாராகின்றன. இம்முறை யாருக்கு வெற்றி என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.
கணவன் - மனைவி
நடிகையர் திஷா பூவய்யா, 'ஸ்பர்ஷா' ரேகா, பெண்களை மையமாக வைத்து 'பரிஷுத்தம்' படம் தயாராகிறது. கணவன், மனைவி பந்தம் எப்படியிருக்க வேண்டும் என்பதை படத்தில் காண்பித்துள்ளனர்.இது கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் தயாராகிறது. படத்தில் மனநல வல்லுனராக ரேகாவும், டி.சி.பி.,யாக திஷா பூவய்யாவும் நடிக்கின்றனர். வரும் நாட்களில் பாங்காங், மலேஷியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
எகிறும் மவுசு
'சலகா' சூப்பர்ஹிட்டானதால், சஞ்சனா ஆனந்துக்கு மவுசு எகிறுகிறது. இவரது அடுத்த படம் எப்போது என்ற, ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்போது தான் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படப்பில் சஞ்சனா பங்கேற்றுள்ளார். இது அப்பட்டமான காதல் கதை. படப்பிடிப்பும் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னட நடிகைகள் ரஷ்மிகா மந்தண்ணா, ஷிரத்தா ஸ்ரீநாத், நபா நடேஷ் என, பலர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மின்னுகின்றனர். இவர்களின் வரிசையில் சஞ்சனாவும் சேர்ந்துள்ளார்.
நாயகியான பாடகிபிரபல பாடகி
சுஹானா சையத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நிர்பயா - 2' என்ற படத்துக்கு பூஜை முடிந்து, படப்பிடிப்பு துவங்க ஏற்பாடு நடக்கிறது. மைசூரு, ஆந்திரா, டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை, மையமாக வைத்து, கற்பனையை கலந்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. ஒரு குற்றத்தின் மூல காரணம் என்ன; அதை எப்படி தடுப்பது என்பதை படத்தில் காண்பித்துள்ளனர். இதுவரை பாடகியாக இருந்த சுஹானா, முதல் முறையாக நாயகியாக நடித்துள்ளார்.
படக்குழு எச்சரிக்கை
கன்னடத்தில் மாறுபட்ட கதையுடன் சில ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்த 'ரங்கதரங்கா' திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதில் ராதிகா சேத்தன், அவந்திகா ஷெட்டி உட்பட பலர் நடித்திருந்தார். இதன் இந்தி ரீ மேக் உரிமையை வாங்கியுள்ளதாக புரொடக்ஷன் ஹவுஸ் கூறுகிறது. ஆனால் இதை 'ரங்கதரங்கா' படக்குழுவினர் மறுத்துள்ளனர். 'எங்களின் சட்டரீதியான அனுமதி பெறாமல், யாராவது ரீ - மேக் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்' என, எச்சரித்துள்ளனர்.
'அவதார புருஷா' இரண்டாம் பாகம்
புஷ்கர் மல்லிகார்ஜூன் தயாரிப்பில், சரண் நடிப்பில் 'அவதார புருஷா' திரைப்படம், டிசம்பர் 10ல் திரைக்கு வரவுள்ளது. இதில் சரண், பத்து அவதாரங்களில் நடித்துள்ளார்.இயக்குனர் சிம்பில் சுனி, வெப் சீரிசுக்காக இந்த கதையை தயார் செய்திருந்தார். ஆனால் கதையை கேட்டு குஷியான புஷ்கர் மல்லிகார்ஜூன், படமாக தயாரிக்க முன் வந்தார். இதன்படி இரண்டு பாகமாக படம் தயாராகிறது. முதல் பாகம் வெளியான, 101 நாட்களுக்கு பின், இரண்டாம் பாகத்தை திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சிவராஜ்குமார் 125 வது படம்
'ராம்போ -2' , 'தம் மாரோ தம்' திரைப்படங்களின் மூலம், இசை உலகில் நுழைந்தவர் பாடகி அதிதி சாகர். நடிகரும், கலை இயக்குனருமான அருண் சாகர் மகளான அதிதி, பின்னணி பாடுவதிலிருந்து, நடிகையாக மாறியுள்ளார். சிவராஜ்குமாரின் 125 வது படமான, 'வேதா' வில், அதிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.டிசம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறதாம். பெங்களூரில் அமைக்கப்படும், பிரம்மாண்டமான செட்டில், முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தயாராகின்றனர். விரைவில் படம் பற்றிய கூடுதல் தகவல் வெளியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X