மாண்டியா மேலவை தேர்தல் சுமலதா ஆதரவு யாருக்கு?

Added : நவ 25, 2021
Share
Advertisement
மாண்டியா:மாண்டியா மேலவை தொகுதிக்கு நடக்கும் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுதி எம்.பி., சுமலதாவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தொண்டர்கள், ஆதரவளித்தனர்; தேர்தல் பிரசார கூட்டங்களில், மூன்று கட்சிகளின் கொடிகள் பறந்தது. அப்போது
 மாண்டியா மேலவை தேர்தல் சுமலதா ஆதரவு யாருக்கு?

மாண்டியா:மாண்டியா மேலவை தொகுதிக்கு நடக்கும் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுதி எம்.பி., சுமலதாவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தொண்டர்கள், ஆதரவளித்தனர்; தேர்தல் பிரசார கூட்டங்களில், மூன்று கட்சிகளின் கொடிகள் பறந்தது. அப்போது அதிகாரத்துக்காக, ம.ஜ.த., வுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், சுமலதாவுக்கு டிக்கெட் கொடுக்காமல் செய்த ஒரு தவறுக்கு மாண்டியாவில் காங்கிரஸ் தலைவர்கள், இன்று பச்சாதாபப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் நடக்கவுள்ள மாண்டியா மேலவை தொகுதி தேர்தலில், சுமலதா ஆதரவை கோர காங்., தலைவர்களுக்கு தர்மசங்கடமாக உள்ளது. தாங்களாகவே காங்., வேட்பாளருக்கு சுமலதா, ஆதரவளித்துள்ளதாக வதந்தி பரப்பினர். இது அதிகமான மக்களின் காதுகளை எட்டும் முன், விழித்துக்கொண்ட சுமலதா, 'நான் எந்த கட்சியின் வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை' என, விளக்கமளித்தார்.
காங்., வேட்பாளர் தினேஷ் கூளிகவுடாவை, வெற்றி பெற வைத்து, ம.ஜ.த., பாதுகாப்பு கோட்டையை தகர்க்க வேண்டும் என, அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.தற்போது பா.ஜ.,வும் கூட, மாண்டியாவில் கால் பதித்துள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை, காங்., தலைவர்களுக்கு இல்லை.
அதே போன்று, பா.ஜ., வேட்பாளர் மஞ்சுவை, வெற்றி பெற வைக்க அக்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி., சுமலதா, ம.ஜ.த.,வை கடுமையாக எதிர்ப்பவர். இவரது ஆதரவு கிடைத்தால், எளிதாக வெற்றி பெறலாம் என பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.ஆனால் இவ்விரு கட்சிகளின் தொண்டர்கள், சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளவர்கள். எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கும் நிலையில் சுமலதா இல்லை. இதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X