ம.ஜ.த.,வில் இணையும் இப்ராகிம் மேலவை எதிர்க்கட்சி தலைவராவாரா?| Dinamalar

ம.ஜ.த.,வில் இணையும் இப்ராகிம் மேலவை எதிர்க்கட்சி தலைவராவாரா?

Added : நவ 25, 2021
Share
பெங்களூரு:ம.ஜ.த., கதவை தட்டும், காங்., மூத்த தலைவர் இப்ராகிம், ஏற்கனவே கட்சியிலிருந்து ஒரு காலை எடுத்து வெளியே வைத்துள்ளார். இவர் ம.ஜ.த.,வில் சேர்ந்து மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புள்ளது.அரசியலில் பேச்சு வன்மை கொண்ட தலைவராக, அடையாளம் காணப்பட்ட இப்ராகிம், குண்டுராவ் அரசில் அமைச்சராக இருந்தார்.அதன்பின் காங்கிரசுக்கு 'குட் பை' கூறிய இவர்,
 ம.ஜ.த.,வில் இணையும் இப்ராகிம் மேலவை எதிர்க்கட்சி தலைவராவாரா?

பெங்களூரு:ம.ஜ.த., கதவை தட்டும், காங்., மூத்த தலைவர் இப்ராகிம், ஏற்கனவே கட்சியிலிருந்து ஒரு காலை எடுத்து வெளியே வைத்துள்ளார். இவர் ம.ஜ.த.,வில் சேர்ந்து மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புள்ளது.
அரசியலில் பேச்சு வன்மை கொண்ட தலைவராக, அடையாளம் காணப்பட்ட இப்ராகிம், குண்டுராவ் அரசில் அமைச்சராக இருந்தார்.அதன்பின் காங்கிரசுக்கு 'குட் பை' கூறிய இவர், ம.ஜ.த.,வில் இணைந்தார். தேவகவுடா பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.மீண்டும் காங்கிரசுக்கு 2008ல் திரும்பினார். தன்னை காங்கிரஸ் ஓரங்கட்டுவதால், அதிருப்தியடைந்த இப்ராகிம், முந்தைய ஆண்டே கட்சியில் இருந்து விலக முற்பட்டார். சித்தராமையா தலையிட்டு சமாதானம் செய்ததால் மவுனமாக இருந்தார்.
தற்போது இவர் ம.ஜ.த.,வில் இணையும் முடிவுக்கு வந்துள்ளார். அக்கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதையறிந்த சித்தராமையாவும், கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும், பென்ஷன் டவுனில் உள்ள இப்ராகிம் வீட்டுக்கு சென்று, கட்சியை விட்டு விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை.ம.ஜ.த.,வில் இணைய உள்ள இவர், மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X