செய்தி செய்தி

தமிழ்நாடு

கடும் இன்னலில் பழங்குடியின மக்கள்: தொகுப்பு வீடு கட்டித்தர கோரிக்கை

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி, நவமலையில், பட்டா கிடைக்காமல் குடிசைகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள், மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, நவமலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே, 60க்கும் மேற்பட்ட வீடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தென்னந்தடுக்குகளில் வேயப்பட்ட குடிசைகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.ஆண்டுதோறும், மழை



ஆனைமலை: பொள்ளாச்சி, நவமலையில், பட்டா கிடைக்காமல் குடிசைகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள், மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, நவமலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே, 60க்கும் மேற்பட்ட வீடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தென்னந்தடுக்குகளில் வேயப்பட்ட குடிசைகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.ஆண்டுதோறும், மழை காலத்தில் குடிசைகள் சேதமடைவதால், கடும் இன்னலுக்கு இடையே வாழ்கின்றனர். பல ஆண்டுகளாக கோட்டூர் பேரூராட்சி, வனத்துறையிடம், வருவாய்த்துறையிடம் கோரிக்கை வைத்தும், பட்டா வழங்கப்படவில்லை. தொகுப்பு வீடுகளும் கட்டித்தரப்படவில்லை.இவர்களது குடிசைகளில் இருந்து, 100 அடி தொலைவிலுள்ள மின்வாரிய குடியிருப்பில், தெருவிளக்கு, மின் இணைப்பு, குடிநீர் என அனைத்தும் வசதிகளும் இருந்தும், பழங்குடியின மக்கள் குடியிருப்பில் எவ்வித வசதியும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.தற்போது, கனமழை பெய்து வருவதால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விரைவில் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:அடர் வனத்தில் வசித்து வந்த பழங்குடியின மக்கள், நவமலை மின்வாரிய குடியிருப்பு அருகே, 1954ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பட்டா வழங்கி, தொகுப்பு வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும், அரசும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பட்டா, மின் இணைப்பு, குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு என, எந்த வசதியும் இல்லாமல் உள்ளனர். குடிசைகளில் வாழும் மக்களுக்கு எவ்வித பாதுகாப்புமில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளில் குடிசைகளை சேதப்படுத்தி, யானை தாக்கியதில் ஒரு சிறுமி உட்பட, இருவர் இறந்துள்ளனர். மழையால் ஒருவர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இறந்துள்ளார்.மின்வாரிய பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு அருகே, வருவாய்த்துறை நிலத்தை கையகப்படுத்தி, பழங்குடியினருக்கு பட்டா வழங்க வேண்டும். கோட்டூர் பேரூராட்சியினர் தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X