துளிகள் செய்தி

தமிழ்நாடு

ரத்த தானம், மருத்துவ முகாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, குள்ளக்கபாளையத்தில், சவுடேஸ்வரியம்மன் இளைஞர் நல சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா டிரஸ்ட், பொம்மியம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் சிகரம் சமூக நல அமைப்பு இணைந்து, ரத்த தான முகாம், இலவச கண் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர்.அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்பார்வையில் நடந்த ரத்த தான முகாமில், 36 பேர் ரத்த தானம் செய்தனர். ராம் பாலிகிளினிக்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, குள்ளக்கபாளையத்தில், சவுடேஸ்வரியம்மன் இளைஞர் நல சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா டிரஸ்ட், பொம்மியம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் சிகரம் சமூக நல அமைப்பு இணைந்து, ரத்த தான முகாம், இலவச கண் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர்.அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்பார்வையில் நடந்த ரத்த தான முகாமில், 36 பேர் ரத்த தானம் செய்தனர். ராம் பாலிகிளினிக் சார்பில் நடத்தப்பட்ட பொது மருத்துவ பரிசோதனையில், 130 பேர்; கண் பரிசோதனையில், 122 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்பட்ட ஐந்து பேருக்கு, ராம் பாலிகிளினிக் சார்பில் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இம்முகாமில், டாக்டர் திருமூர்த்தி, மகப்பேறு நிபுணர் சகுந்தலா, எலும்பு முறிவு நிபுணர் தினேஷ் ராம்குமார் ஆகியோர் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X