வரி, வாடகையில் தளர்வுக்கு வாய்ப்பில்லை! எம்.எல்.ஏ., பரிந்துரைக்கு கமிஷனர் 'பளிச்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
வால்பாறை: ''அரசின் உத்தரவை பின்பற்றி வரி, வாடகை விதிக்கப்படுகிறது, தளர்வு ஏற்படுத்த வாய்ப்பு இல்லை,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் உள்ளிட்டோர் கமிஷனரை சந்தித்தனர்.எம்.எல்.ஏ., பேசும்போது, ''வால்பாறை



வால்பாறை: ''அரசின் உத்தரவை பின்பற்றி வரி, வாடகை விதிக்கப்படுகிறது, தளர்வு ஏற்படுத்த வாய்ப்பு இல்லை,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் உள்ளிட்டோர் கமிஷனரை சந்தித்தனர்.எம்.எல்.ஏ., பேசும்போது, ''வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உயர்த்தப்பட்ட, கடை வாடகையை குறைக்க வேண்டும். தொழிலாளர் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்யக்கூடாது. மக்கள் நலன் கருதி, வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என்றார்.கமிஷனர் சுரேஷ்குமார் பேசும்போது, ''தலைமையில் இருந்து வரும் உத்தரவை தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். நாங்களாக எந்த முடிவும் எடுக்கவில்லை. முறைப்படி தான் கடை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.அதே போல், தொழில்வரி பிடித்தம் செய்வது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடம் தான் பேசிக்கொள்ள வேண்டும். வரி வசூல் செய்வது தான் நகராட்சியின் வேலை. அரசின் உத்தரவை பின்பற்றி வரி, வாடகை விதிக்கப்படுகிறது, தளர்வு ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. வாடகை உயர்வையும் குறைக்க முடியாது,'' என்றார்.நகராட்சியில், தற்காலிக டிரைவராக பணியாற்றும் பழனிச்சாமிக்கு கடந்த சில தினங்களாக பணி வழங்கவில்லை. அவர், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால், எம்.எல்.ஏ., வாயிலாக கமிஷனரை சந்தித்து மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்க வந்தார்.அப்போது, கமிஷனர் சுரேஷ்குமார், ''எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்ட வேண்டியது தானே. நீங்க கமிஷனரா, நான் கமிஷனரா. அதிகாரத்தை பயன்படுத்தி வேலைக்கு வர வேண்டாம்,'' என, ஆவேசமாக பேசினார். இதனால், ஏதுவும் பேச முடியாமல், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் வெளியேறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X