செய்தி செய்தி

தமிழ்நாடு

'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு கலை நிகழ்ச்சியால் விழிப்புணர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
உடுமலை: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, உடுமலை ஒன்றியத்தில், 10 நாட்கள் நடத்தப்படுகிறது.ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில், மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்புகளை குறைக்க, பள்ளிக்கல்வித் துறையால், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டம் தொடர்பாக, கலைக் குழுவினர் வாயிலாக கரகாட்டம், நாடகம் என,

உடுமலை: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, உடுமலை ஒன்றியத்தில், 10 நாட்கள் நடத்தப்படுகிறது.ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில், மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்புகளை குறைக்க, பள்ளிக்கல்வித் துறையால், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டம் தொடர்பாக, கலைக் குழுவினர் வாயிலாக கரகாட்டம், நாடகம் என, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உடுமலை ஒன்றியத்தில், ராணி கலைக்குழுவினர், 10 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.இதற்கான துவக்க நிகழ்ச்சி, பார்க் ரோடு, நகராட்சி பள்ளியில் நடந்தது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பிரிட்டோ, பள்ளி துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தினமும், இரு பள்ளிகள் மற்றும் இரு குடியிருப்பு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளி நேரங்களை தவிர இதர நேரங்களில் மாணவர்களின் குடியிருப்புக்கு அருகே தன்னார்வலர்கள் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்பு வழங்குதல், கற்றல் திறனை வலுப்படுத்துதல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் எளிய முறையில் கற்றல் வாய்ப்பை வழங்குதல், அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்க செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ்.ஏ., வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராபின், ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X