சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கண் சிமிட்டும் அமரீந்தர்!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கண் சிமிட்டும் அமரீந்தர்!'என்னை அவ்வளவு எளிதாக அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடியாது' என்கிறார், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்.பஞ்சாப் காங்கிரசில் கொடி கட்டி பறந்தவர் அமரீந்தர். அந்த மாநிலத்தின் முதல்வராகவும் முத்திரை பதித்தவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் கட்சியில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவால், இவருக்கு
அக்கம் பக்கம்


கண் சிமிட்டும் அமரீந்தர்!



'என்னை அவ்வளவு எளிதாக அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடியாது' என்கிறார், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் காங்கிரசில் கொடி கட்டி பறந்தவர் அமரீந்தர். அந்த மாநிலத்தின் முதல்வராகவும் முத்திரை பதித்தவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் கட்சியில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவால், இவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தொடர் நெருக்கடிகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர், காங்கிரசிலிருந்தும் வெளியேறினார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவர், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி, தன் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்; மாநிலம் முழுதும் சுற்றுப் பயணத்தை
துவக்கியுள்ளார். 'பஞ்சாபில் காங்கிரஸ், அகாலி தளம் போன்ற மிகப் பெரிய கட்சிகள் உள்ளன. பா.ஜ.,வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. இந்த அரசியல் சூழலில் புதிய கட்சியை துவக்கி, அமரீந்தர் என்ன செய்யப் போகிறார்' என, பலரும்
முணுமுணுக்கின்றனர். இது குறித்து அமரீந்தரிடம் கேட்டால், 'சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் நான் தான் அடுத்த முதல்வர். எப்படி வெற்றி பெறப் போகிறோம் என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள்' என, கண் சிமிட்டுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
26-நவ-202115:37:13 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao சபாஷ் இப்படிப்பட்ட தலைவர்கள்தான் பி.ஜே.பிக்கு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X