தமிழ்நாடு

உளவியல் ஆலோசனை மையங்களால்... நம்பிக்கை ஏற்படுத்தலாம்! மாணவர் அச்சம் போக்க வேண்டுகோள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: 'பள்ளி மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் செயல்பாடுகளை தொய்வின்றி நடைபெறவும்; இந்த மையத்தை கல்லுாரி அளவில் விரிவுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கல்வி மேம்பாட்டு குழு வலியுறுத்தி வருகிறது.தமிழகத்தில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மன அழுத்த போக்க ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக, நடமாடும் உளவியல் ஆலோசனை

பொள்ளாச்சி: 'பள்ளி மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் செயல்பாடுகளை தொய்வின்றி நடைபெறவும்; இந்த மையத்தை கல்லுாரி அளவில் விரிவுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கல்வி மேம்பாட்டு குழு வலியுறுத்தி வருகிறது.தமிழகத்தில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மன அழுத்த போக்க ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம், கடந்த, 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த மையத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிவதுடன், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, அச்சம், தயக்கம் போக்கும் வகையிலும் செயல்பட்டது.இந்த ஆலோசனை மையம், மாணவர்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடைபெற்றன. இதனால், மையத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தற்போது பள்ளிகள் துவங்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களின் அச்சம், கல்வி சூழலுக்கு ஏற்ப அவர்களை மாற்ற, நடமாடும் மன ஆலோசனை மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும்; இது பள்ளி அளவில் மட்டுமின்றி கல்லுாரி அளவிலும் செயல்படுத்த வேண்டும் என, கல்வி மேம்பாட்டுக்குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.கல்வி மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் லெனின் பாரதி கூறியதாவது:பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, குடும்பநிலை, இளம்பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச்சோர்வு, மனகுழப்பம், பாலியல் பிரச்னைகள், தேர்வு அச்சம், மதிப்பெண் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், தற்கொலைக்கு முயற்சித்தல், தேர்வை புறக்கணிப்பது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டனர்.இந்த நிலை மாறி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை மையம் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த மையங்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கி விட்டன. இந்த மையங்களை தமிழக அரசு மீண்டும் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். பிறருக்கு உதவும் பண்பு, சுய சிந்தனை, தன்னம்பிக்கை போன்ற பண்புகளை மாணவர்களுக்கு புகட்டுவதிலும் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.இதனை மறந்து, மதிப்பெண் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டுள்ள சில பள்ளிகளின் செயல்பாட்டால், மாணவர்கள், விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இந்நிலையை மாற்ற உளவியல் ஆலோசனை கட்டாயம் தேவையாகும். திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் பயன் உள்ளதாக இருக்கும். தற்போதுள்ள கொரோனா கால கட்டத்தில் மாணவர்களிடம் ஏற்படும் அச்சம், மன அழுத்தம் போக்கவும்; படிப்பில் கவனம் செலுத்தவும் உதவியாக இருக்கும்.பள்ளி அளவில் மட்டுமின்றி, கல்லுாரி அளவிலும் இந்த ஆலோசனை மையங்களை விரிவுப்படுத்த வேண்டும். கல்லுாரி மாணவர்களிடையே ஏற்படும் மன ரீதியான பிரச்னைகள் களையப்படும்.மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும்; தவறான பாதைக்கு செல்லாமல் இருக்கவும் இந்த ஆலோசனை மையங்கள் உதவியாக இருக்கும். இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X